エピソード

  • தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட எங்கே, எப்படி உதவிபெறலாம்?
    2025/09/18
    கடந்த செப்டம்பர் 10ம் திகதி உலக தற்கொலை தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கிலும் இதுகுறித்த விழிப்புணர்வையூட்டும் நோக்கிலும் ஆண்டுதோறும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்கொலை சம்பவங்கள் நமது சமூகத்தில் அதிகரித்திருப்பதற்கான காரணங்கள் தொடர்பிலும் இதற்கு எப்படி எங்கே உதவிபெறலாம் என்பது தொடர்பிலும் உளவியலாளரான கௌரிஹரன் தனபாலசிங்கம் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். மெல்பனில் வாழும் கௌரிஹரன் அவர்கள் 15 வருடங்களுக்கும் மேலாக உளவியலாளராக பணியற்றிவரும் அதேநேரம் பூர்வீக குடி பின்னணிகொண்டவர்கள் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பல்வேறு தரப்பினருடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
    続きを読む 一部表示
    16 分
  • Autism உள்ள குழந்தைகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தில் என்ன உள்ளது?
    2025/09/18
    Autism உள்ள குழந்தைகளை NDIS-இலிருந்து மாற்றி "Thriving Kids" என்ற புதிய திட்டத்திற்குள் உள்வாங்கும் திட்டத்தை அரசு அண்மையில் அறிவித்தது. இதுகுறித்த விவரணத்தை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
    続きを読む 一部表示
    9 分
  • Ozone படலத்தை பாதுகாக்க தவறினால் என்ன நடக்கும்?
    2025/09/18
    செப்டம்பர் 16ஆம் தேதி - சர்வதேச ozone பாதுகாப்பு தினம். Ozone படலம் என்றால் என்ன? அதற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அதற்கான காரணங்கள் மேலும் ozone படலத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் குறித்து விரிவான தகவல்களுடன் ஒரு விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.
    続きを読む 一部表示
    13 分
  • செய்தியின் பின்னணி : ஓய்வூதிய தொகை செப்டம்பர் 20 முதல் உயர்கிறது!
    2025/09/18
    எதிர்வரும் செப்டம்பர் 20 முதல், பல்வேறு Centrelink கொடுப்பனவுகளின் விகிதங்கள் மற்றும் வரம்புகள் சீரமைக்கப்படுவதால், Centrelink கொடுப்பனவு பெறுபவர்கள் கூடுதல் தொகை பெறுவர். குறிப்பாக ஓய்வூதியத் தொகையும் சிறிது அதிகரிக்கப்படவுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
    続きを読む 一部表示
    9 分
  • மகாத்மா காந்திக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தவர்
    2025/09/18
    தென்னாப்பிரிக்காவில் காந்தி அவர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தவர் ரெட்டமலை சீனிவாசன் அவர்கள். தலித் சமூகத் தலைவர், தமிழகத்தின் மூத்த குடிகளான ஆதி திராவிட மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்த ரெட்டமலை சீனிவாசன் அவர்களின் நினைவு கடந்தவாரம் ( 18 செப்டம்பர்) அனுசரிக்கப்பட்டது. அவர் தொடர்பான காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
    続きを読む 一部表示
    3 分
  • இன்றைய செய்திகள்: 18 செப்டம்பர் 2025 வியாழக்கிழமை
    2025/09/18
    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 18/09/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
    続きを読む 一部表示
    5 分
  • 'Ambition gap': Why most people believe they'd step in to stop hate - but don't - வெறுப்பு சம்பவத்தை தடுக்க ஆசைப்பட்டாலும், நடைமுறையில் அதை செய்வதில்லை - ஏன்?
    2025/09/17
    Aaron says he made a "snap decision" to intervene when he witnessed racism. But many people say they don't know what to do if they see hate or harassment. - நீங்கள் எப்போதாவது துன்புறுத்தல் அல்லது வெறுப்பு சம்பவத்தை கண்டதுண்டா? அதற்கு எதிராகக் குரல் கொடுத்தீர்களா, இல்லை அமைதியாக நின்றீர்களா?
    続きを読む 一部表示
    7 分
  • Centrelink கொடுப்பனவு தொகை அதிகரிப்பு: யாரெல்லாம் பெறமுடியும்?
    2025/09/17
    Centrelink கொடுப்பனவு பெறுபவர்களில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கான உதவித்தொகை, செப்டம்பர் 20 முதல் அதிகரிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    続きを読む 一部表示
    3 分