• உறங்க மறுக்கும் விழிகள் : ஒரு காதலின் கதறல் (Sleepless Eyes: A cry of despair)
    2026/07/01

    "முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்..." - காதலின் தனிமை எவ்வளவு கொடியது என்பதை சங்க இலக்கியம் இவ்வளவு அழகாகச் சொல்லுமா?


    ​உலகமே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, தன் காதலன் பிரிவால் வாடும் தலைவி, அந்த அமைதியான இரவில் எப்படித் தவிக்கிறாள் என்பதை உணர்த்தும் வரிகள் இவை. காற்று கூட அவளை வருத்த, அவள் விழிகள் உறக்கத்தைத் துறந்து தவிக்கின்றன. ஒரு பெண்ணின் மென்மையான அதேசமயம் வலிநிறைந்த அந்தத் தவிப்பை, இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு 'தமிழ் காதலி' (Tamizh Kadhali) பாட்காஸ்டில் விரிவாகக் கேட்டு உணருங்கள்.


    ​இந்த இரவு, உங்கள் இதயத்தை வருடும் காதலின் கதறலாக இருக்கட்டும். 🎧✨


    "Mutti venkol, thakku venkol..." – Could Sangam literature truly capture the agony of love so beautifully?


    ​As the entire world drifts into a deep slumber, the heroine, pining for her separated lover, struggles through the silence of the night. These verses depict her inner turmoil—even the wind seems to torment her, and her eyes refuse to find sleep.


    ​Experience this delicate yet profound pain of a woman’s longing, reimagined for today, in the latest episode of our 'Tamizh Kadhali' podcast.


    ​Let this night be a reflection of a love that cries out to your heart. 🎧✨


    #TamizhKadhali #Kurunthogai #TamilLiterature #SleeplessNights #TamilPodcast #SangamLiterature #LovePain #EmotionalStory #ClassicTamil #StreamingNow



    続きを読む 一部表示
    13 分
  • காலில் விழுந்த துரோகம்: காதலா? நாடகமா? (Betrayed at Her feet:Love or Drama)
    2026/06/24

    அன்பின் பெயரால் அரங்கேறும் பொய் நாடகங்கள்! 🎭


    ​காதல் என்பது வெறும் வார்த்தை அல்ல; அது செயல்களில் வெளிப்படும் உண்மை. ஆனால், தன் தவறை மறைக்க ஒருவன் தன் துணையின் காலடியில் விழுந்து கெஞ்சுவது—அது உண்மையான வருத்தமா? அல்லது அடுத்தமுறை தவறு செய்வதற்கான கால்கோள் விழாவா?


    ​கலித்தொகையின் சங்க கால வரிகள் பேசும் அதே நிதர்சனம், இன்றும் நம் நவீன காதலிலும் தொடர்கிறது. தன் மார்பில் படிந்திருந்த சந்தனம் அவன் செய்த துரோகத்தைச் சொல்ல, அவன் காலடியில் விழுந்து அவன் காட்டும் அன்பு வெறும் நாடகம் என்பதை உணரும் தலைவியின் தவிப்புதான் இன்றைய எபிசோட்.


    ​இந்த ஏமாற்று வித்தையை எப்படி எதிர்கொள்கிறாள் தலைவி? மீண்டும் அதே வலையில் வீழ்வாளா? அல்லது முற்றுப்புள்ளி வைப்பாளா?


    ​கேளுங்கள் 'தமிழ் காதலி' எபிசோட் 11!


    ​🎧 உங்களுக்குப் பிடித்த தளங்களில் எபிசோடை மிஸ் செய்யாமல் கேட்க, பயோவில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள்!



    ​Deceptive Dramas Staged in the Name of Love! 🎭


    ​Love is not just a word; it is a truth revealed through actions. But when a person falls at their partner's feet, begging for forgiveness to hide their own mistake—is it genuine remorse? Or is it merely laying the foundation for the next betrayal?


    ​The stark reality portrayed in the verses of the ancient Kalithogai continues to persist in our modern relationships today. The sandalwood paste smeared on his chest bears witness to his infidelity, and the agony of the heroine who realizes that the love he feigns at her feet is nothing but a drama—that is today's episode!


    ​How does the heroine confront this trickery? Will she fall into the same trap again? Or will she put a full stop to it?


    ​Listen to 'Tamil Kaadhali' Episode 11!


    ​🎧 To listen to the episode on your favorite platforms without missing out, click the link in the bio!



    続きを読む 一部表示
    20 分
  • பிறவிப் பெருங்கடலும் பிரியாத காதலும் ( The ocean of Births and Undying Love)
    2026/06/17

    ​"இம்மை மாறி மறுமை ஆயினும் நீயாகியர் என் கணவனை..."


    ​ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, சங்க இலக்கியத் தலைவி ஒருத்தி தன் காதலனிடம் முன்வைத்த அந்த உன்னதமான வேண்டுதல் என்ன? இந்த பிறவியில் மட்டுமல்ல, இனிவரும் பல பிறவிகளிலும் நீயே என் கணவனாக இருக்க வேண்டும், உன் நெஞ்சில் நிறைந்தவளாக நான் இருக்க வேண்டும் என்ற அந்த அழியாத காதலின் ஆழத்தை சங்கத் தமிழ் வரிகளோடு இன்றைய எபிசோடில் அலசுகிறோம்.


    ​பிறவிகள் கடந்தும் தொடரும் காதலின் சுவாரஸ்யமான பக்கங்களை, 'தமிழ் காதலி' பாட்காஸ்டின் 10-வது எபிசோடில் கேளுங்கள்.


    ​"Even if this life passes and we move on to the next, may you be my husband..."


    ​Thousands of years ago, what was that noble wish a Sangam literary heroine made to her lover? In today's episode, we explore the depth of that undying love—the wish that he should be her husband and she should be the one who fills his heart, not just in this life, but in every life to come—through the beauty of ancient Tamil verses.


    ​Listen to the 10th episode of the 'Tamizh Kadhali' podcast to dive into the fascinating facets of love that transcend lifetimes.



    続きを読む 一部表示
    13 分
  • காதலை அளக்க முடியுமா? (Can Love be Measured)
    2026/06/10

    மனிதன் அறிவியல் துணை கொண்டு விண், மண், நீர் என இயற்கையின் பொருண்மைகளை அளந்து அறிந்தான். ஆனால், சங்க காலத் தலைவியோ தன் காதலின் பிரமாண்டத்தை உணர்த்த, நிலம், நீர் மற்றும் கடல் ஆகியவற்றின் அளவீடுகளைக் கையாளுகிறாள்.


    ​இந்த அளவீடுகளால் காதலையும் அதன் பிரமாண்டத்தையும் உண்மையில் அளக்க முடியுமா?


    ​விடை அறிய "தமிழ் காதலி" (Tamizh Kadhali) பாட்காஸ்டின் இந்த முழு எபிசோடைக் கேளுங்கள்! 🎧


    ​உங்கள் காதலை எதனோடு ஒப்பிட்டுப் பிரமாண்டப்படுத்துவீர்கள்? உங்கள் பதில்களைக் கமெண்டில் சொல்லுங்கள்! ❤️✨


    ​"Man, with the aid of science, has measured and understood the physical nature of the sky, land, and water. Yet, the heroine of the Sangam era seeks to convey the grandeur of her love through the very measures of land, water, and the vast ocean.


    ​Can these measurements truly quantify love and its magnificence?


    ​To find the answer, listen to the full episode of the 'Tamizh Kadhali' podcast! 🎧


    ​To what would you compare your love to express its grandeur? Let us know your thoughts in the comments! ❤️✨"





    続きを読む 一部表示
    14 分
  • சாம்பலான பேரறிவு : யாழ்ப்பாணத்து ஏட்டுச்சுவடிகள் (The Ashes of Tamil Wisdom: Jaffna Library
    2026/06/03

    95,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள்... ஈழத்தின் ஆகச்சிறந்த அறிவுப் பொக்கிஷம்... ஒரே இரவில் சாம்பலாக்கப்பட்ட கொடூரம்! 1981-ல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது, உண்மையில் அங்கே என்ன நடந்தது? அது ஏன் வெறும் 'தீ விபத்து' அல்ல, ஒரு 'இனஅழிப்பு' என்று அழைக்கப்படுகிறது? வரலாற்றின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பாட்காஸ்டிற்கு உங்களை வரவேற்கிறோம்!"


    ​"More than 95,000 books... the grandest repository of Eelam Tamil knowledge... reduced to ashes overnight! What truly transpired during the burning of the Jaffna Library in 1981? Why is this defined not as a mere 'fire accident', but as a targeted 'cultural genocide'? Welcome to the podcast as we uncover the darkest chapters of history!"


    続きを読む 一部表示
    11 分
  • தும்பியிடம் சென்ற வழக்கு (The case of the Wandering Bee)
    2026/05/27

    ​"பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா? அல்லது சூடும் பூக்களால் மட்டுமே மணம் வருகிறதா?" — இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்க இலக்கியத்தில் கிளம்பிய இந்த சுவாரசியமான விவாதம், இன்றும் நம் திரையிசைப் பாடல்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.


    இறைவனே நேரில் வந்து வாதாடிய குறுந்தொகையின் 2-வது பாடலான "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி..." பாடலையும், அதன் நீட்சியாக நம் மனதைக் கவர்ந்த மூன்று நவீன திரை இசைப் பாடல்களையும் ஒப்பிடும் ஒரு சுவாரசியமான இலக்கியப் பயணம் தான் இந்த எபிசோட்!


    ​"Do women's hair possess a natural fragrance, or is the aroma solely from the flowers they wear?" — This fascinating debate, which sparked in Sangam literature over two thousand years ago, continues to echo in our film songs even today.


    ​This episode is an exciting literary journey comparing the 2nd song of Kurunthogai ("Konguthaer Vaazhkai Anjirai Thumbi..."), where the Almighty Himself stepped down to debate this very question, with three of our favorite modern film songs that beautifully carry forward its legacy!





    続きを読む 一部表示
    15 分
  • இதயத்தில் வழியும் முள்ளிவாய்க்கால் குருதி (The Blood of MULLIVAIKKAL that flows in the heart)
    2026/05/20

    ​வேர்களில் தொடங்கி இதயத்தின் நாடி நரம்புகள் வரை வழியும் முள்ளிவாய்க்கால் குருதி, காலங்கள் கடந்தாலும் தமிழினத்தின் வரலாற்றில் அழியாத வடுவாகவே இருக்கும் என்பதை இந்த எபிசோட் ஆழமாகப் பதிவு செய்கிறது.

    துயரின் உச்சம் அறிவதோடு தற்காக்கும் சூழலின் அவசியம் மற்றும் சுயத்தை இழந்திடக் கூடாது என்பதையும் அழுத்தமாக உரக்க கூறுகிறது உங்களின் தமிழ் காதலி.


    துயரத்தின் 6-வது அத்தியாயம் இப்போது உங்கள் செவிகளில்... ---


    This episode deeply records that the blood of Mullivaikkaal, flowing from the roots straight to the veins of our hearts, will forever remain an unerasable scar in the history of the Tamil race, transcending time.


    ​While unraveling the pinnacle of grief, your Tamil Kadhali also strongly and loudly emphasizes the absolute necessity of self-defense in our current environment and the vital importance of never losing our true identity.


    The 6th chapter of tragedy is now in your ears... ---





    続きを読む 一部表示
    15 分
  • காதல் வழு: மௌன சாட்சியும் தீராத தவிப்பும் (A Love Flaw: The Mute Witness and Unending Anguish)
    2026/05/13

    குறுந்தொகை 25- முத்தமழை இங்கு கொட்டித்தீராதோ (திரையிசை) ஒப்பீடு


    அன்று, யாரும் இல்லாத இடத்தில் அந்தத் தினைத்தாள் நாரை மட்டும் சாட்சியாக நிற்க, தன் காதலனின் பொய்யால் கலங்கி நின்றாள் ஒரு சங்க காலப் பெண். இன்று, முத்துமழை கொட்டித் தீர்த்தாலும், தீராத தாகத்தோடு தவித்துக் கொண்டிருக்கும் ஒரு நவீனக் காதல். இந்த இரண்டு காலங்களையும் இணைக்கும் அந்த 'ஏமாற்றம்' மற்றும் 'தவிப்பு' பற்றித்தான் இன்று நாம் பேசப்போகிறோம்... நாரை சொன்ன கதையும்... நனையாத தவிப்பும்!"


    "Kurunthogai 25 vs. Muthu Mazhai Ingu Kottitheeraatho (Film Music) — A Comparison


    Back then, in a place completely deserted with only a single egret standing as witness, a Sangam-era woman wept, shattered by her lover's lies. Today, even as a rain of pearls pours down, a modern-day love yearns with an unquenchable thirst. Today, we are going to talk about that 'disappointment' and 'longing' which seamlessly connect these two eras... The story told by the egret... and the yearning that remains dry!"



    続きを読む 一部表示
    13 分