エピソード

  • Vijay-க்கு வலை வீசும் EPS, Anbil-க்கு புது அசைன்மென்ட்! | Elangovan Explains
    2025/05/03

    அதிமுக செயற்குழு கூட்டத்தில், நான்கு முக்கியமான திட்டங்களை தீட்டியுள்ளார் எடப்பாடி. குறிப்பாக 'மிஷன் 1200' என்ற அசைன்மென்டை ர.ர-க்களுக்கு கொடுத்துள்ளார். ஜெ பாணி அரசியலை தீவிரப்படுத்த உள்ளார் என்கிறார்கள். அதேநேரத்தில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், 'ஃபார்முலா 1244' என்பதை கொடுத்து, நான்கு கட்டளைகளையும் போட்டுள்ளார் மு.க ஸ்டாலின். புது வொர்க் பிளானையும் வகுத்துக் கொடுத்துள்ளார்.

    '2026' தேர்தலையொட்டி வேகம் எடுக்கிறது திமுக Vs அதிமுக வார். இன்னொரு பக்கம், செங்கோட்டையனின் புது சபதமும், அன்பிலுக்கு கொடுக்கப்பட்ட புது அசைன்மென்ட்டும்.

    続きを読む 一部表示
    21 分
  • 'TTV டேஞ்சர் இல்லை' EPS புது மூவ், மனதை மாற்றிய நயினார்! | Elangovan Explains
    2025/05/02

    எடப்பாடியோடு நெருங்கும் டிடிவி...எதிர்ப்பு காட்டாத அதிமுக என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னணியில் எடப்பாடிக்கு, மாஜிக்கள் கொடுத்த சீக்ரெட் சர்வே ரிப்போர்ட் உள்ளது. 5 விஷயங்கள் ஷாக் கொடுத்துள்ளன. இதை களைய , அமமுக-வுடன் நட்பு பாராட்டுவது தவறில்லை என கருதுகிறார்கள். இதில் இருதரப்புக்கும் சமாதானம் ஏற்படுத்த, நயினார் நாகேந்திரன் எடுத்த முயற்சிகளும் உள்ளன. இந்த அசைன்மென்ட் கொடுத்தது அமித் ஷா என்கிறார்கள்.

    続きを読む 一部表示
    17 分
  • நயினார் கொடுத்த Files, டெல்லி சீக்ரெட்ஸ், Udhayanidhi-யின் வித்தியாசமான Plan! | Elangovan Explains
    2025/04/30

    தேமுதிக இளைஞரணி பொறுப்புக்கு வந்திருக்கும் விஜய பிரபாகரன். இதன் பின்னணியில் பிரேமலதாவின் மூன்று முக்கியமான மூவ். டெல்லிக்கு பறந்த நயினார் நாகேந்திரன் அங்கே மோடியிடம் கொடுத்த முக்கிய டாக்குமெண்ட்ஸ். இன்னொரு பக்கம் நயினாருக்கு ஆசி கொடுத்த ஆர்எஸ்எஸ். ஏன்?

    இங்கே திமுகவுக்குள் '2.0' நோக்கிய பயணம். அதை அடைவதற்கு முன்பாக நிறைய சிக்கல்களும் தலைகாட்ட தொடங்கியுள்ளன. முக்கியமாக ஐந்து பஞ்சாயத்துகள். அதில் முக்கியமாக வீக் மாவட்டங்கள், உட்கட்சியில் சீனியர்கள் - ஜூனியர்கள் மோதல், இளைஞர் அணியை கண்டு கொள்ளாத மாவட்டங்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள். இவை எல்லாவற்றையும் சரிகட்ட ஒரு புதிய சர்வே எடுத்து ரிப்போர்ட் கொடுத்துள்ளது தனியார் நிறுவனம். அதை வைத்து விஐபி வேட்பாளர்கள், எதிர்க்கட்சிகள் இவர்களை எதிர்கொள்ள புது ஃபார்முலா வகுத்துக் கொடுத்துள்ளார் உதயநிதி என்கிறார்கள். இதற்கிடையே மதுரை மல்லுக்கட்டு உச்சத்துக்கு சென்றுள்ளது. குறிப்பாக பி டி ஆர் தொகுதியை எதிர்பார்க்கும் சிலர். டெல்லி அரசியலுக்கு அனுப்ப திட்டமா?

    続きを読む 一部表示
    22 分
  • நான்கு அமைச்சர்களால் Stalin அரசுக்கு ஆபத்து? ஸ்கெட்ச் போடும் Amit shah?! | Elangovan Explains
    2025/04/29

    அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி. இதை கொண்டாடும் எடப்பாடி & அமித்ஷா டீம்.

    இதில், 'துரைமுருகன்,திண்டுக்கல் ஐ.பெரியசாமி, கே.என் நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் என அடுத்த ஹிட் லிஸ்டில் நான்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவர்களை நெருக்குவதன் மூலம், மு.க ஸ்டாலின் அரசை சாய்த்து விடலாம் என்பது அதிமுக - பாஜக கூட்டணி கணக்கு. இந்த நெருக்கடிகளை சமாளிக்,க புது வியூகங்களை நோக்கி நகரும் மு.க ஸ்டாலின். அதை முறியடிக்க 'ரைமிங் ரோஸ்ட்' அஸ்திரத்தை கையில் எடுத்த எடப்பாடி. இவர்கள் இருவருக்கும் இடையிலான ஆடு புலி ஆட்டம், அனல் வீசுகிறது.

    続きを読む 一部表示
    18 分
  • Stalin-ஐ கோபப்படுத்திய Ponmudi, Vijay தரும் கோவை ஷாக்! | Elangovan Explains
    2025/04/28

    'பொன்முடி மற்றும் செந்தில்பாலாஜி' ஆகியோர், தங்களின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் துறைகள் ஈரோடு முத்துசாமி, ராஜ கண்ணப்பன், சிவசங்கர், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. எதனால் ராஜினாமா செய்தார்கள்? முக்கியமாக முரண்டு பிடித்த பொன்முடி... வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின். ஏன்? இன்னொரு பக்கம், நால்வரை ஸ்டாலின் டிக் அடித்ததற்கு பின்னணியில், சில அரசியல் கணக்குகளும் உள்ளது. இதில் தமது ஸ்மார்ட் மூவ் மூலம் உள்ளே வந்த எஸ்.எஸ் சிவசங்கர்.இதில், இரண்டு அமைச்சர்கள் ராஜினாமாவை, தங்களின் வெற்றியாக கருதி, அதிமுக-பாஜக கூட்டணி, கூடுதல் தலைவலியை கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் புது ரூட்டுக்கு மாறும் மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம், விஜய் கொடுத்த கோவை ஷாக் பதிலடியாக களத்துக்கு வந்த உதயநிதி ஸ்டாலின். இரண்டு பேருக்குமிடையிலான போரில் ஸ்கோர் செய்தது யார்?

    続きを読む 一部表示
    24 分
  • Seeman-க்கு தூண்டில் போடும் BJP, Udhayanidhi-க்கு 13 சிக்கல்! | Elangovan Explains
    2025/04/26

    அடுத்த சட்டமன்றத் தேர்தல், உதயநிதி ஸ்டாலினுக்குமான ஒரு பரீட்சை என்கிறார்கள் தி.மு.க-வினர். கட்சியை கரை சேர்ப்பது மட்டுமில்லாமல், 'டார்கெட் 200' - ஐ சக்சஸாக்க வேண்டும் ஆனால் கூட்டணி, அமைச்சர்கள், உட்கட்சி பிரச்சனைகள் என '13' - க்கும் மேற்பட்ட சிக்கல்கள், ஷாக் கொடுக்கின்றன. அதை முறியடிக்க புதிய திட்டங்களையும் கையில் எடுத்துள்ளார் உதயநிதி என்கிறார்கள். இன்னொரு பக்கம், மு.க ஸ்டாலினிடம், இரண்டு டிமாண்டுகளை முன்வைத்த வைகோ.

    அடுத்து, பா.ஜ.க-வுக்காக சீமானிடம் டீல் பேசிய ஓ.பி.எஸ். அவர்களின் கணக்கு என்ன?

    இதற்கு, என்ன சொன்னார் சீமான்?

    続きを読む 一部表示
    18 分
  • அப்செட் RN Ravi...ஹேப்பி Stalin...'கூவத்தூரை' கையிலெடுத்த EPS! | Elangovan Explains
    2025/04/25

    அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு, திடீரென தடபுடல் விருந்து வைத்துள்ளார் எடப்பாடி. அவர்களுக்கு பெரியளவில் பரிசு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார் பெரிய அளவிலான 'இனிப்பு மூட்டைகள்' இதற்குப் பின்னணியில் கூவத்தூர் சென்டிமென்ட் உள்ளது என்கிறார்கள்.

    அடுத்து, மாவட்ட செயலாளர்களுக்கும் புதுப்புது அசைன்மென்ட் கொடுத்துள்ளார்.

    அவர் முன்பு உள்ள சவால்களை சமாளித்து, சக்சஸ் கொடுக்குமா இந்த கூவத்தூர் ஃபார்முலா? இன்னொரு பக்கம், போட்டி மாநாடு நடத்தி, அப்செட்டில் இருக்கும் ஆளுநர் ஆர்.ன் ரவி. 'அவரால்தான் ஆறுதலே' என வேறு கோணத்தில் பார்க்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

    続きを読む 一部表示
    19 分
  • Stalin-க்காக Senthil balaji ராஜினாமா முடிவு? பரபரக்கும் DMK! | Elangovan Explains
    2025/04/24

    'துரைமுருகன், கே.என் நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜி' என நான்கு பேரை டார்கெட் செய்யும் 'எடப்பாடி - நயினார் நாகேந்திரன்' டீம். நால்வருக்கும் இருக்கின்ற வழக்கு சிக்கல், நீதிமன்றம் டபோட்டிருக்கும் செக் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இதை கையில் எடுத்து அட்டாக் செய்கிறது அ.தி.மு.க - பா.ஜ.க. இதன் மூலம் மு.க ஸ்டாலினுக்கு நெருக்கடி தருவது, அமித்ஷா போட்டுக் கொடுத்திருக்கிற வொர்க் பிளான். இதை சமாளிக்க,எங்கள் மு.க ஸ்டாலினிடம், பக்கா பிளான் உள்ளது என்கிறார்கள் அறிவாலய சீனியர்கள்.

    続きを読む 一部表示
    20 分