Click here to reply to @Ivannikhi "வணக்கம் நண்பர்களே. இன்றைக்கு ஒரு வித்தியாசமான தலைப்பு. இன்றைக்கு எல்லா இடத்திலும் பேசப்படுவது முக்கியமாக தமிழ்நாட்டில். என்னென்ன மொழிகள் கற்பிக்க வேண்டும். எங்கள் குழந்தைகளுக்கு. என்பது பிரச்சனை போல காட்டப்படுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், என்னென்ன மொழிகள் ஏழை குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட வேண்டும். இது தான் சப்ஜெக்ட். இது தான் டாபிக். இதை பற்றி தான் பேசப்படுகிறது. ஏனென்றால் ஏழைகள் இந்நாட்டில் நம் நாட்டில். இரண்டாம் தர மக்களாகவே பார்க்கப்படுகிறது. பணக்காரர்கள், மத்திய தரப்பு மக்கள் எப்பொழுதும் சிறந்தவைகளையே பெற்றுக் கொள்கிறார்கள். தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். ஆங்கில மொழி பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள் தனியாக கோச்சிங்குக்கு அனுப்புகிறார்கள். எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. அரசு நடத்தும் பள்ளிகள், கிராமத்து மாணவர்கள், இளைஞர்கள் இவர்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்சனை பெரிதாக பார்க்கப்படுகிறது. ஏன் இந்த. இரண்டு தரமான கல்வி கொள்கை. நான் என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதில் எந்த விதமான அரசியலும் எனக்கு பின்புலமோ கிடையாது. என்னுடைய அனுபவத்தில் இருந்து நான் கூறுவது என்னவென்றால். தரமான கல்வி. அது தாய்மொழி கல்வி என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஆங்கில மொழி என்பது வேலை வாய்ப்புக்காகவும், பிற பயன்பாட்டிற்கும் தொடர்பு மொழியாக நாம் பயன்படுத்துகின்றோம். ஆனால் இங்கே நான் ஒரு எண்பது தொண்ணூறு இரண்டாயிரம் போன்ற காலங்களில் வாழும் பொழுது மெட்ரிகுலேஷன் போன்ற கல்விகளை படித்தவர்கள். சிறந்த மாணவர்களாக கருதப்பட்டார்கள். எடுத்துக்காட்டாக நாம் பெரிதும் பேசப்படக்கூடிய. IAS தேர்வு இன்று வரைக்கும். முதல் நிலை தேர்வு. நான் பேசுவது preliminary examination. அதில் நூறு மாணவர்களில் ஒரு மாணவர் கூட தேர்வு பெற மாட்டார்கள். எடுத்துக்காட்டாக பத்து லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள் என்றால் ஒரு லட்சம் மாணவர்கள் கூட அடுத்த நிலைக்கு போக மாட்டார்கள். இது எவ்வளவு போவார்கள் அப்படி என்று பார்த்தோம் என்றால் ஒரு பத்தாயிரத்தில் இருந்து பதினைந்தாயிரம் பேர். அந்த நிலையில் இன்றைக்கு ...
続きを読む
一部表示