エピソード

  • சட்டத்தின் வகைகள்
    2026/08/19

      • அரசமைப்புச் சட்டம்: ஒரு நாட்டின் ஒட்டுமொத்த அரசாங்கக் கட்டமைப்பையும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் காக்கும் உன்னதச் சட்டம்.
      • நாட்டிடைச் சட்டம்: உலக நாடுகள் தங்களுக்குள் அமைதியாக இயங்க வகுத்துக் கொண்ட உலகளாவிய விதிமுறைகள்.
      • நிலவரைச் சட்டம்: ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழும் மக்கள் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் சட்டம் (உ-ம்: குற்றவியல் சட்டம்).
      • இனமுறைச் சட்டம்: ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது சாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் தனிப்பட்ட சட்டம் (உ-ம்: இந்து திருமணச் சட்டம்).
      • உரிமை இயல் சட்டம்: தனிநபர்களுக்கு இடையே எழும் சொத்து, ஒப்பந்தம் போன்ற பிரச்சனைகளைத் தீர்த்து இழப்பீடு வழங்க உதவும் சட்டம்.
      • குற்ற இயல் சட்டம்: சமூக அமைதியைக் குலைக்கும் கொலை, திருட்டு போன்ற குற்றங்களுக்குத் தண்டனை பெற்றுத் தரும் சட்டம்.
      • நிலைமுறைச் சட்டம்: நமது உரிமைகளையும் கடமைகளையும் வரையறுத்துக் கூறும் சட்டம் (உ-ம்: சொத்துரிமை).
      • நெறிமுறைச் சட்டம்: அந்த உரிமைகளை நீதிமன்றத்தின் மூலம் எப்படிப் பெற வேண்டும் என்று வழிமுறை வகுக்கும் சட்டம் (உ-ம்: சான்று சட்டம்)

    続きを読む 一部表示
    14 分
  • சட்டத்தின் மூலங்கள்
    2026/08/19

    சட்டத்தின் மூலங்களைச் சட்ட வல்லுநர்கள் பல்வேறு கோணங்களில் வகைப்படுத்தியுள்ளனர்.அ) சட்டத்தின் ஐந்து பொதுவான மூலங்கள்:

      • அரசமைப்பு (Constitution): ஒரு நாட்டின் அடிப்படைச் சட்ட நெறி.
      • இயற்றுமுறை (Legislation): நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் இயற்றும் சட்டங்கள்.
      • முன்தீர்ப்பு நெறி (Precedent): நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புக் கொள்கைகள்.
      • வழக்கநெறி (Custom): சமுதாய மக்கள் நீண்டகாலமாகப் பின்பற்றும் வழக்கங்கள்.
      • சட்டவல்லுநர் நூல்கள் (Juristic Writings): புகழ்பெற்ற சட்ட அறிஞர்கள் எழுதிய ஆய்வு நூல்கள்.
      • குறிப்பு: வழக்கநெறியும் சட்ட நூல்களும் நீதிமன்றங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே சட்டமாகின்றன. எனவே, அரசமைப்பு, இயற்றுமுறை, முன்தீர்ப்பு நெறி ஆகிய மூன்றே முதன்மையான சட்டமுறையான மூலங்கள் ஆகும்

    続きを読む 一部表示
    21 分
  • சட்டவியல் தோற்றம் செயல்பாடு
    2026/08/19

    சட்ட இயல் (Jurisprudence) என்றால் என்ன? "Juris" மற்றும் "Prudentia" என்ற இரு இலத்தீன் சொற்களில் இருந்து உருவானதே "Jurisprudence" என்ற ஆங்கிலச் சொல். "Juris" என்றால் சட்டம்; "Prudentia" என்றால் ஞானம் அல்லது திறமை. எனவே, இதன் நேரடிப் பொருள் "சட்டம் பற்றிய ஞானம்" என்பதாகும்

    続きを読む 一部表示
    18 分