
ஐ.பி-க்கு ED லாக், சுதாரிக்கும் STALIN, கவனத்தோடு EPS! | Elangovan Explains
カートのアイテムが多すぎます
カートに追加できませんでした。
ウィッシュリストに追加できませんでした。
ほしい物リストの削除に失敗しました。
ポッドキャストのフォローに失敗しました
ポッドキャストのフォロー解除に失敗しました
-
ナレーター:
-
著者:
このコンテンツについて
சீனியர் அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடக்கிறது.
முறைகேடான பண பரிவர்த்தனை உள்ளிட்ட காரணங்கள் அமலாக்கத்துறை வட்டாரங்களில் அடுக்கப்படுகிறது.
அதே நேரத்தில் பழனி போன்ற ஆன்மீக தலைநகரங்கள் குறி வைக்கிறது பாஜக. மேலும் திமுக பொருளாதார கட்டமைப்பை உடைக்க நினைக்கிறது டெல்லி அதையொட்டியே இந்த ரெய்டு என திமுக ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு.
இதன் பின்னணிகள். இன்னொரு பக்கம் 'மேற்கு லிருந்து அதிமுக தோல்வி தொடங்கும்' என சமீபத்தில் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதையொட்டி அதிமுக-வை பலவீனப்படுத்த ஏற்கனவே மேற்கு மாவட்டங்களில் இருந்து சிலர் திமுகவில் இணைந்தனர். செந்தில் பாலாஜி இந்த அசைன்மென்ட் செய்து முடித்தார். தற்போது கூடுதலாக தங்கமணி உள்ளிட்டவர்களை குறி வைக்கிறது திமுக.
'நான் வாழ்நாள் முழுக்க அதிமுக தான்' என தங்கமணி தெரிவித்தாலும் அதிருப்தியும் நிலவுகிறது. இதை பயன்படுத்திக் கொள்ள திமுக நினைக்கிறது ஆனால் திமுக உள் முரண்பாடுகளை பயன்படுத்திக் கொள்ள எடப்பாடி நினைக்கிறார் அதனால்தான் 'துரைமுருகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை' என தொடர்ந்து பரப்புரை செய்கிறார். இப்படியாக மாறி மாறி பலகீனப்படுத்தும் அரசியல் ஓடுகிறது.