『புதுவெளிச்சம் - வெள்ளியங்காட்டான்』のカバーアート

புதுவெளிச்சம் - வெள்ளியங்காட்டான்

புதுவெளிச்சம் - வெள்ளியங்காட்டான்

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

Listen to this audiobook in full for free on
https://esound.space

Title: புதுவெளிச்சம்
Author: வெள்ளியங்காட்டான்
Narrator: Ramani
Format: Unabridged
Length: 3:44:20
Language: Tamil
Release date: 03-16-2024
Publisher: Findaway Voices
Genres: Fiction & Literature, Essays & Anthologies

Summary:
வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். 'ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு 'லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது 'லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். 'வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. கவிஞர் புவியரசுவின் அருமையான முன்னுரையோடு வெளிவந்த தத்துவ விளக்க நூல் புது வெளிச்சம். ”அறிவியல் பார்வையும் விசாலமான சமய நூலறிவும் உண்மையை உரக்கச் சொல்லும் துணிவும் காலத்திற்கேற்ற சிந்தனையும் கொண்டு படைத்துள்ள இந்தப் புது வெளிச்சம் என்ற ஆய்வு நூல் நம் சிந்தைக் குழப்பத்தைத் தெளிவுபடுத்தும் அரிய படைப்பு.” பேராசிரியர் ரமணியின் வாசிப்பில் உபநிடதங்களை வாழ்வியலாக்கிய வெள்ளியங்காட்டானின் நூல் ஒலி நூலாக….
まだレビューはありません