The God of the Highest Mountain [Tamil Edition]

現在1 冊
0 out of 5 stars レビューはまだありません。

Athi Malai Devan Part 1 [The God of the Highest Mountain, Part 1] あらすじ・解説

" 'அத்திமலைத்தேவன்' என்கிற இந்த சரித்திரப் புதினம் பிறந்ததற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. ஒரு சிறு வத்திக்குச்சியின் தீப்பொறி, ஒரு பெருங்காட்டினையே அழித்து விடும்! அப்படி ஒரு இரண்டெழுத்து நடிகையின் வாழ்வில் நடைபெற்ற ஒரு சிறு நிகழ்வுதான் இந்த சரித்திர மர்மப் புதினம் தோன்றியதற்கே காரணம் என்றால், உங்களால் நம்ப முடியுமா?

விடியலில் கூவும் பறவையின் பெயர் கொண்ட படத்தில் அறிமுகமானவர் அந்த நடிகை. கிடுகிடுவென வளரத் தொடங்கினார்! ஒரு படத்தில், கோவில் ஒன்றில் அந்த நடிகை பாடி ஆடுவது போன்ற காட்சியை எடுக்கத் திட்டமிட்டார் இயக்குநர். அதற்காக காஞ்சி வரதராஜ சுவாமி கோவிலில் இருந்த "அனந்தசரஸ்" என்னும் குளத்தின் மண்டபத்தின் மீது அபிநயம் பிடிக்க வைத்து படம் பிடிக்க நினைத்தார்.

தற்செயலாக ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த ஒரு முதியவர் இதனைக் கண்டு அதிர்ந்து போனார். "வேண்டாம்! அதன் அடியில் அத்திவரதர் எழுந்தருளி இருக்கிறார். மிகவும் உக்கிரமான மூர்த்தி. அவர் மீது நடிகை நடனமாடுவது போன்று எடுக்க வேண்டாம்" என அந்த முதியவர் வேண்டிக் கேட்டுக்கொண்டார். அந்த முதியவரைப் பணம் பறிக்க வந்த பிச்சைக்காரனாக எண்ணிய படக்குழுவினர், அவரை விரட்டி விட்டனர்.

படம் வெளிவந்ததா இல்லையா என்பதே தெரியாதபடி, இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் பல பிரச்சனைகள். எல்லாரையும் விட மிகவும் பாதிக்கப்பட்டவர், நடனமாடிய அந்த நடிகை.

அந்த நடிகையின் வலது காலில் தீராத வலி ஏற்பட்டு அதனால் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது. ஆனால் வலது காலில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை டாக்டர்கள் இடதுகாலில் செய்து விட்டிருந்தனர்! நடிகையால் நடமாடவே முடியவில்லை.

Please Note: This audiobook is in Tamil.

©2022 Kalachakram Narasimha (P)2022 Storyside IN
続きを読む 一部表示
商品リスト
  • 1

    ¥800 で予約注文、またはプレミアムプラン無料体験を始めて非会員価格の30%OFFで予約注文